டிஜிட்டலாக மாறும் தமிழக சட்டபேரவை

6 months ago

Tamil_News_large_2419517

 'இ-விதான்' திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் மாற்றுவது குறித்த பயிற்சி வகுப்பை பேரவையில் சபாநாயகர் தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய தேசிய 'இ-விதான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான 2 நாள் பயிற்சி வகுப்பு தமிழக சட்டப்ரேவையில் தொடங்கியது. இதனை சபாநாயகர் தனபால் துவங்கி வைத்தார். சட்டசபை அதிகாரிகள், அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

இ-விதான் திட்டத்தின் மூலம் கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும் எம்.எல்.ஏ.,க்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செயலி வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பேரவை மண்டபத்தில் பெரிய டிஜிட்டல் திரைகள், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்கு முன்பாக, தொடு திரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்கக் கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்