அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு-11 பேர் படுகாயம்-2 பேர் கவலைக்கிடம்

5 months ago

us-1575208856

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லூசியானா மாகாணத்தின் நியூ ஓர்லியன்ஸ் பிரெஞ்ச் குவார்ட்டர் பகுதியில் உள்ள கால்வாய் தெருவில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா நேரப்படி அதிகாலையில் இத்துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரின் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்