7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

4 days ago

landslide

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சியை பதிவு செய்துள்ள காலி,இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கேகாலை, குருநாகல்,மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே  இந்தமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த அபாய எச்சரிக்கையை  விடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று பிற்பகல் 02.30 மணி முதல் நாளை பிற்பகல் 02.30 மணி வரையான காலப்பகுதிக்காக  குறித்த  அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்