மெக்சிகோவில் கொரோனா உச்சம்

1 week ago

corona

கொரோனா வைரஸ் தொற்று மெக்ஸிக்கோவில் உச்சத்தை எட்டியுள்ளது 

நாளாந்தம் பதிவாகும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பினையடுத்து அந்நாட்டு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட  அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மெக்ஸிக்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,409 பேர்  புதிய தொற்றாளர்கள்  இனம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மெக்ஸிக்கோவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,000 ஐ கடந்துள்ளது.

நாட்டின்  முடக்க நிலை தளர்த்தப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை  உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்