தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்

1 year ago

Tamil_News_large_2213648

புதுடில்லி: தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.தற்போது சுஷில் சந்திரா, நேரடி வரிகள் ஆணைய தலைவராக(CBDT) உள்ளார். ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1980ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஆர்எஸ்(வருமான வரித்துறை) அதிகாரி ஆவார். 2016 நவம்பரில் சிபிடிடி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவரது பதவிக்காலம் ஒராண்டு நீட்டிக்கப்பட்டது. வரும் மே 31ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சுஷில் சந்திரா தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
3 பேரை கொண்ட தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா உள்ளார். மற்றொரு கமிஷனராக அசோக் லவாசா உள்ளார்.மார்ச் முதல்வாரத்தில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்