டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள்; ஆண்டர்சன் சாதனை

1 month ago

Tamil_News_large_2601368

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இச்சாதனையை படைத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இங்கிலாந்து 1 - 0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடக்கிறது. பாலோ ஆன் பெற்ற பாக்., அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

கடைசி நாளான இன்று, பாக்., கேப்டன் அசார் அலி விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன், டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் 600 விக்கெட் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இதுவரை 156 டெஸ்டில் 600 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்.,), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708 விக்.,) மற்றும் இந்தியாவின் அனில் கும்ளே (619 விக்.,) இச்சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்