உலகில் முதல்முறையாக.. இப்படி ஒரு "கொரோனா கேஸ்".. 2ம் அலையின் தொடக்கம்? எச்சரிக்கும் வல்லுனர்கள்!

1 month ago

corona54-1598360664

ஹாங்காங்கில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர் மீண்டும் அங்கு கொரோனா காரணமாக பாதிப்படைந்து இருக்கிறார். சில மாத இடைவெளியில் அவருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது, இது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் முடியவில்லை. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. இன்னும் இந்த வைரஸின் தோற்றம் குறித்த ''எஸ்டிடி'' தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க தற்போது கொரோனா இரண்டாம் அலை குறித்த அச்சத்தை உலக மருத்துவர்கள், வல்லுநர்கள் எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஹாங்காங்கில் இருக்கும் இளைஞர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். 33 வயதான அந்த இளைஞருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் முதலில் இவருக்கு ஏற்பட்ட கொரோனா ஒருவகையை சேர்ந்தது (strain) தற்போது அவருக்கு ஏற்பட்டு இருக்கும் கொரோனா வேறு வகையை சேர்ந்தது.

இரண்டாவது முறை அறிகுறி இல்லாமல் கொரோனா வந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மனித குலத்துடன் இந்த வைரஸ் நீங்காமல் இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகில் அதிகாரபூர்வமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் ஒருவர் மீண்டும் கொரோனா காரணமாக சில மாதம் கழித்து பாதிக்கப்பட்டு உள்ளார். இப்படி நடப்பது இதுவே முதல்முறை. சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து ஒரே வாரத்தில் மீண்டும் பாசிட்டிவ் என்று வந்துள்ளனர். ஆனால் அது, மீண்டும் ஏற்படும் அலையில் சேராது. இப்படி இரண்டு மூன்று மாதம் கழித்து ஒருவருக்கு மீண்டும் கொரோனா வருவதுதான் ஆபத்தான செய்தி.
இதனால் கொரோனா பாதிக்கப்படாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிலும் இரண்டாவது முறை கொரோனா ஏற்பட்ட நபருக்கு அறிகுறியே இல்லை. ஆனால் அவரின் உடல் மிக மோசமாக நலிவடைந்து உள்ளது. இதன் மூலம் என்னதான் ஒருவருக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினாலும்.. அவருக்கு மீண்டும் சைலண்டாக கொரோனா வர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக கொரோனா இரண்டாம் அலை ஏற்படும். ஹாங்காங்கில் ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா கேஸ் இரண்டாம் அலையின் தொடக்கமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்போது இருக்கும் கேள்வி, எத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு மீண்டும் கொரோனா ஏற்படும் என்பதுதான். அதை பொறுத்தே மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும், என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளும் வலிமையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தடுப்பு மருந்துகள் எத்தனை நாளுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். எத்தனை மாதங்கள் தடுப்பு மருந்து கொரோனா பரவலை தடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் கொரோனா வேக்சின் மிகவும் வலிமையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்