வைரல் வீடியோ.. காரின் மீது ஏறி அமர்ந்த யானை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

6 months ago

elephant6-1573036577

தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்காவில் கார் ஒன்றின் மீது யானை ஏறி அமர்ந்தது. நொடி பொழுதில் அந்த கார் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றது. யானையிடம் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த கார் நொடி பொழுதில் தப்பிய வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளால் வழிமறிக்கப்படும் காட்சிகள் அவ்வப்போது பார்த்திருப்போம். சில நேரங்களில் தனியாக வரும் ஒற்றை யானை, வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கும்.
அப்படித்தான் தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை காட்டில் சுற்றித்திரிந்த யானை வழிமறித்தது. இதனால் காரை நிறுத்திய சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் யானையின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தனர்.
முதலில் யானை தும்பிக்கையால் காரின் முன்பக்கத்தை தட்டியது. அப்படியே தனது இரண்டு முன்கால்களை எடுத்து காரை மிதித்து. பின்னர் தனது இரண்டு முன்கால்களையும் அப்படியே காரின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு யானை கொண்டுசென்றது. பின்னர் காரை அப்படியே அமுக்க முயன்றது.

உடனடியாக சுதாரித்த கார் ஓட்டுனர் அங்கிருந்து காரை மெதுவாக நகர்த்த ஆரம்பித்தார். அப்படியே வேகமாக காரை எடுத்து வண்டியை வேகமாக ஓட்டி அங்கிருந்து சென்றார். நொடி பொழுதில் காரை அவர் வேகமாக எடுத்துச்சென்றதால் காரில் இருந்தவர்கள் தப்பினார்கள். இல்லாவிட்டால் யானையிடம் சிக்கி காரோடு சேர்த்து காரில் உள்ளவர்கள் ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.
யானையிடம் இருந்து காரில் வந்த சுற்றுலா பயணிகள் தப்பிச்செல்லும் வீடியோவை யாரோ அதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்