சிங்கப்பூரில் ஆரம்ப பாடசாலை ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனை!

1 week ago

TEST COVID

சிங்கப்பூரில் சுமார் 30,000 ஆரம்ப பாடசாலை ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாலர் பள்ளி ஆசிரியர்கள், அதிபர்கள், நிர்வாக ஊழியர்கள், சமையல்காரர்கள் மற்றும் துப்புரவாளர்கள் என அனைவரும் தில் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சோதனை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

பாலர் பாடசாலையில் கல்விபயிலும் குழந்தைகள் 6 வயதிற்குட்பட்டோர்  என்பதால், சமூக விலகல் மற்றும் முகமூடி அணிதல்  செயற்பாடுகளை அவர்கள், எவ்வாறு கையாளுவார்கள் என்பது தொடர்பிலும்  கேள்வி எழுந்துள்ளது.

பாலர் பாடசாலைகள் மீலாத் திறக்கப்படுவது குறித்த தீர்மானம் எட்டப்படாத நிலையில்,  ஜூன் மாதம் முதலாம் திகதி முடக்க நிலையில் முதற்கட்டமாக சில தளர்வுகளை சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

உள்ளூர் பாலர் பாடசாலைகளில் நோய்த்தொற்று உள்ளது.

சிங்கப்பூரில் முன்னதாக ஏப்ரல் மாதத்தில், ஒரு ஆசிரியருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ஒரு கல்வி நிலையம் 10 நாட்களுக்கு மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரு குடும்ப உறுப்பினரால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றுக்கு  வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மற்றொரு கல்வி நிலையமும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

சமீபத்திய செய்திகள்