நிதியமைச்சரின் அறிவிப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும் - மோடி  நம்பிக்கை

4 months ago

MODI

இந்திய மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள்  சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய  பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ருவிட்டரில் கருத்துப்பதிந்து  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதியமமைச்சரின் பொருளாதார சீர்திருத்தஅறிவிப்புகள் இந்திய தொழிற்துறையை ஊக்கப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறைக்கு உதவுவதல்,  கிராமப்புற பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்தல், மாநிலங்களின் சீர்திருத்தப் பாதைகளுக்கு உத்வேகம் கிடைத்தல் போன்றவை இதன் மூலம்  அடையப்பெறும் என்றும்  அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி  நிதியமைச்சரின் அறிவிப்புகள் இந்திய சுகாதார மற்றும் கல்வித் துறைகளிலும் மாற்றத்தை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
 

சமீபத்திய செய்திகள்