சட்டசபையில் சைலண்டா பாம் போட்ட உறுப்பினர்.. நாற்றம் தாங்காமல் வெளியில் ஓடிய சபாநாயகர்

4 months ago

national-assembly14-1565594037

கென்யாவில் உள்ள சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் சைலண்டாக பாம் போட்டதால், சிறிது நேரம் அவை தள்ளி வைக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை கென்யாவின் ஹோமா பே கவுன்ட்டி மாநில சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கு சந்தை குறித்த விவாதம் நடந்து கொண்டு இருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு உறுப்பினர் சைலண்டாக வாயுவை வெளியேற்றிவிட்டார். இதனால் கூட்ட மண்டபம் முழுவதும் துர்நாற்றம் பரவியது. உறுப்பினர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைத்தப்படி ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக்கொண்டனர். அப்போது தடாளடியாக எழுந்த உறுப்பினர் ஒருவர், "நம்மில் யாரோ ஒருவர் காற்றை மாசுப்படுத்திவிட்டார். அவர் யார் என்று எனக்கு தெரியும்", என்று கூறினார். இதையடுத்து உடனடியாக எழுந்த மற்றொரு உறுப்பினர், "அவர் என்னை தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நாற்ற வேலையை செய்தது நானில்லை", எனக் கூறி ஜகா வாங்கினார். என்ன செய்வதென்று தெரியாத சபாநாயகர், கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தார். இதையடுத்து, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது, துர்நாற்றம் போனதும் அவை மீண்டும் தொடங்கி நடைபெற்றது. ஒரு சட்டமன்றக் கூட்டத்தையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு, சக்கிவாய்ந்த அந்த பாமை போட்டது யார் என கடைசி வரை தெரியவில்லை. 

 

சமீபத்திய செய்திகள்