தலைவர் தேர்வு; ராகுல் சோர்வு

1 year ago

Tamil_News_large_2311837

 

தான் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், தாமதமின்றி உடனே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்று ராகுல் கூறியுள்ளார். ஏற்கனவே பலமுறை கூறியும் தலைவர் தேர்வு செய்யப்படாததால் ராகுலே சோர்வு அடைந்துவிட்டார் என்கிறார்கள்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 17 மாநிலங்களில் ஒரு எம்.பி.,சீட் கூட அக்கட்சி பெறவில்லை. ஆனால், தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் மத்திய மாநிலத் தலைவர்கள் பதவி விலகவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த ராகுல், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், காங்கிரஸ் காரியக்கமிட்டி அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. நாடு முழுவதும் கட்சி அமைப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்கும்படியும் வலியுறுத்தியது.

அந்த வகையில், உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன. சில மத்திய, மாநிலத் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனினும், தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாகவே உள்ளார்

ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், மேலும் தாமதமின்றி புதிய தலைவரை காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூடி தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் ராகுல் இன்று ( ஜூலை 3) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பலமுறை சொல்லியும் தலைவர் தேர்வு செய்யட்டாததால், ராகுல் சோர்வு அடைந்துவிட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.

 

 

 

 

 

 

.

சமீபத்திய செய்திகள்