13ல் பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி

3 months ago

Tamil_News_large_2406337

 பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவ.,13ம் தேதி, பிரதமர் மோடி பிரேசில் பயணிக்கிறார்.

இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின், 11வது உச்சி மாநாடு பிரேசிலில் நடக்க உள்ளது. 13, 14 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி வரும் 13ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார்.

'புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற உள்ளது. மேலும் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 5 நாடுகள் இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்