இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  காலமானார் !

1 month ago

arumugam thonda

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  காலமானார்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார்.

ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பேசும் சக்தியை தன்னகத்தே கொண்டிருந்த அவர் தற்போதைய அரசாங்கத்தில்   தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சராகவும்  செயற்பட்டார்.

1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்த அவர் 1993இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.

1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்ற அவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

தொடர்ந்தும்  நாடாளுமன்றத்  தேர்தல்களில் வெற்றியீட்டிய அவர், பல அமைச்சு பதவிகளை வகித்து வந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அவரது  மறைவிற்கு எமது  Mudivili24 இணையத்தளம்  சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சமீபத்திய செய்திகள்