தீவிரவாத சக்திகளுக்கு நாட்டில் இடமளிக்க போவதில்லை -அனுரகுமார

4 months ago

Anura kumara

எவ்வித தீவிரவாத சக்திகளுக்கும் நாட்டில் இடமளிக்க போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், இன ரீதியாக இயங்கும் தலைவர்களால் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது என்றும் கூறினார்.

பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றி பேசும் பெரும்பான்மையான தலைவர்கள் இராணுவ வீரர்கள் மற்றும் சோதனை சாவடிகளை அமைப்பது தொடர்பாகவே பேசிவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் நாட்டில் இராணுவ இருப்பை அதிகரிக்காமல், நிலையான பாதுகாப்பை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு எந்தவொரு தீவிரவாத சக்திகளுக்கும் தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுவும் நாட்டிற்குள் செயல்பட தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகள்