மெட்ரோ ரயில் சேவை - 2 நாட்கள் அவகாசம் தேவை !

1 month ago

delhi-metro-7591

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பிக்க  இரண்டு நாட்கள் அவகாசம் தேவை என தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் ஊரடங்கு உத்தரவு படிபடியாக தளர்த்தப்பட்டு வருவதுடன் உள்நாட்டு விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையையும்  ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரி வருகின்றனர் .

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த  கைலாஷ் கெலாட், “டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றே மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. எவ்வகையான உத்தரவு வந்தாலும் அதனை ஏற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.  என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும் இதற்கு குறைந்தது  2 நாட்கள் அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்