அஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

5 months ago

vivegam210919_2

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்சராஹாசன் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விவேகம்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் 'விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக சத்யஜோதி தியாகராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இதுகுறித்த மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடிக்கும் இன்னொரு படத்தையும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்