மோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ராகுலுக்கு கோர்ட் சம்மன்

1 month ago

Tamil_News_large_2460987

 ஜார்க்கண்ட் மாநிலம் மோராபாதில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த, காங்., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல்பேசுகையில், பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என, அழைத்துக் கொள்கிறார். நாட்டில் ஊழலற்ற ஆட்சி, வேலை வாய்ப்பு, என, பல பிரச்னைகளில் தீர்ப்பதாக , வாக்குறுதியளித்து ஏமாற்றி விட்டார். நாட்டு மக்கள் அனைவரையும், ஒரு காவலாளி அவமானப்படுத்தி, தற்போது, 'காவலாளி ஒரு திருடன்' என்ற நிலைக்கு, தரம் தாழ்ந்து விட்டார் என விமர்சனம் செய்து பேசினார்.

பிரதமரை விமர்சித்து அவதூறாக பேசியதாக ராகுல் மீது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வரும் பிப்.22-ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.
 

சமீபத்திய செய்திகள்