செயலிழந்த பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப்.. மக்கள் ஷாக்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மார்க்!

5 months ago

x12-1562168733-jpg-pagespeed-ic-ckmncpe06v-1562170997-1574957586

உலகம் முழுக்க பல இடங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம் அடைந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமை வாங்கியது. அதன்பின் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. இதன் மூலம் சோசியல் மீடியா உலகில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டராகிராம் பெரிய ஜாம்பவான்களாக இருக்கிறது. இது எல்லாம் தற்போது பேஸ்புக் குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் ஆகும். இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க ஒரே நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று முக்கிய ஆப்கள் செயலிழந்து போய் இருக்கிறது. சில மணி நேரங்களாக இந்த ஆப்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.

இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் இந்த மூன்று ஆப்களும் வேலை செய்யாமல் முடங்கி இருக்கிறது. நீண்ட நேரம் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. அதேபோல் பேஸ்புக் மெசேஞ்சர், பேஸ்புக் லைட் ரக ஆப்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனமான Oculus (பேஸ்புக் வாங்கிவிட்டது) ஆகியவையும் செயல்படவில்லை. இந்த பேஸ்புக் குடும்ப ஆப்கள் வேலை செய்யாமல் போனது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விசாரித்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்