சென்னையில் ஒரே நாளில் 1,053 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

1 month ago

Tamil_News_large_2599804

தமிழகத்தில் இன்று (ஆக.,22) அதிகபட்சமாக சென்னையில் 1,053 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1.08 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,294 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,24,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 406 பேருக்கும், கோவையில் 389 பேருக்கும், திருவள்ளூரில் 384 பேருக்கும், கடலூரில் 309 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், வேலூரில் 244 பேருக்கும், புதுக்கோட்டையில் 154 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,053 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,08,545 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 393 பேரும், திருவள்ளூரில் 384 பேரும், காஞ்சிபுரத்தில் 362 பேரும், கோவையில் 312 பேரும், ராணிப்பேட்டையில் 272 பேரும், கடலூரில் 224 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
 

சமீபத்திய செய்திகள்