பதவி மோகத்தில் ராஜபக்ச குடும்பம் - அசாத் சாலி

5 months ago

Azath-Salley-UNP

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது ஜனாதிபதி பதவி மோகம் ஏற்பட்டுள்ளதாக  மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும்  அவர் தெரிவிக்கையில் , “ராஜபக்ஷ குடும்பத்தினர் பல சொத்துக்களை கொள்ளையடித்தனர்.  ஆனால் இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

ஏனென்றால் அவர்களும் கொள்ளையர்கள், இவர்களும் கொள்ளையர்கள். உங்கள் அரசாங்கம் வந்தால் எங்களை காப்பாற்றுங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை காப்பாற்றுகிறோம் என்ற நோக்கிலேயே மஹிந்தவும் ரணிலும் செயற்படுகின்றனர்.

இதனாலே மஹிந்த கடும்பத்தினருக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் இல்லை. அவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் தப்பிக்கும் வகையிலேயே அந்த முறைப்பாடுகள் அமைகின்றன. எனவே மக்கள் இதனை புரிந்து செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்