மோடி விமானத்தை அனுமதிக்க பாக்., மறுப்பு

6 months ago

Tamil_News_large_2398811

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கவும், அந்த நாட்டின் தலைவர்களை சந்திக்கவும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று(அக்.,28) பயணம் மேற்கொள்கிறார்.

தன் வான் எல்லை வழியாக, பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க, பாக்., மறுத்துள்ளது. இதை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 'ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதைக் கண்டித்து, மோடியின் விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளார்.

இந்தாண்டு துவக்கத்தில், பாக்.,கின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. அதையடுத்து, தன் வான் எல்லையைப் பயன்படுத்த, பாக்., தடை விதித்திருந்தது. பின், தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாக்.,எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றபோதும், மோடியின் விமானத்துக்கு அனுமதி அளிக்க பாக்., மறுத்தது. அதேபோல், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், ஐரோப்பிய நாடான, ஐஸ்லாந்து செல்லும்போதும், தன் வான்வெளியை பயன்படுத்த, அனுமதி மறுத்தது.

 

சமீபத்திய செய்திகள்