இந்திய வளர்ச்சிக்காக உழைக்கிறோம்: மோடி

8 months ago

Tamil_News_large_2423421

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், கடந்த 6 மாதங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உழைத்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், அது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட கருத்து:

ஒவ்வொருவரின் வளர்ச்சி,அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற கொள்கையால் கவரப்பட்டும், 130 கோடி இந்தியர்களின் ஆசியுடனும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உழைத்து வருகிறது.
 

 

 

சமீபத்திய செய்திகள்