ஜூலை 15 ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

11 months ago

Tamil_News_large_2317777

வரும் ஜூலை 15 ல், சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், '' சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில், அண்ணா மன்றத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் வேலுார் தொகுதி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்,'' என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வேலுார் தொகுதிக்கு தி.மு.க., நிர்வாகிகள் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்