கொட்டப்பட்டிருந்த கழிவுகள் மீளவும் கொள்கலன்களுக்குள் அடைப்பு !

5 months ago

garbage

பிரித்தானியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டிருந்த கழிவுகள் மீண்டும் கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்க ஏற்றுமதி வலயப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளே இவ்வாறு மீண்டும் கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கழிவுத் தொகை 333 கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொட்டப்பட்டிருந்த குறித்த கழிவுத் தொகையினால், சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை கருத்திற் கொண்டே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவுகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், தீர்ப்புக் கிடைக்கும் வரை அவற்றை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்