அரசியல் பிரவேசமா?: 'என்கவுன்டர் ' ஸ்பெஷலிஸ்ட் மறுப்பு

1 year ago

Tamil_News_large_2323613

மஹாராஷ்டிராவின் பிரபல ''என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்'' பிரதீப் ஷர்மா,58, தனது பதவியை ராஜினாமா செய்தார். தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் ஷர்மா,58, 1983- ஆண்டு, தாராவி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த காலம் முதல் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தது முதல் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுன்டர் மூலம் போட்டுத்தள்ளியுள்ளார். இவர் மீது போலி என்கவுன்டர் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2008-ல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தது, மற்றொரு நிழல் உலக தாதா, சோட்டா ராஜனின் கூட்டாளி லக்கான் பையாவை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்ற வழக்கு உள்ளிட்ட வழக்குகளில், 2010-ம் ஆண்டு பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2013-ல் லக்கான் பையா என்கவுன்டர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் விடுவிக்கப்பட்டார்.தற்போது தானோ நகர குற்றப்பிரிவு (மிரட்டலுக்கு எதிரான தடுப்பு பிரிவு) கமிஷனராக உள்ளார்.
2020-ம் ஆண்டு இவர் ஓய்வு பெற உள்ள நிலையில் கடந்த 4-ம் தேதி சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் அரசியலில் குதித்து வரப்போகும் சட்டசபை தேர்தலில் அந்தேரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த கட்சியில் இணைய உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.இதற்கு பிரதீப் ஷர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.வில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதீப் ஷர்மா இவரது நெருங்கிய நண்பர் என்பதால் சத்யபால் சிங் மூலம் பா.ஜ.வில் இணைய பிரதீப் ஷர்மா முயற்சித்து வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்திய செய்திகள்