அகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில்

10 months ago

download

Agalaathey - Ner Konda Paarvai

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில், அகலாதே பாடலின்காணொளியை படக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில்  இரண்டு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளதுடன் தற்போது வைரலாகிவருகின்றது.

இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இப்படத்தில் அஜித் – வித்யாபாலன் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். காதலை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

‘பிங்க்’ படத்தின் தமிழ் மொழியாக்கமான இந்தப்படத்தில் தமிழ் இரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒருசில விடயங்களை சேர்த்துள்ளார் இயக்குநர் வினோத்.

இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்