விமான பயணத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு: ஆய்வில் தகவல்

1 month ago

Tamil_News_large_2599805

விமான பயணத்தின் போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அன்றாட வாழ்வில் ஹால்கள், தியேட்டா்கள் போன்ற மக்கள் நிறைந்த பகுதியில் கொரோனா நோயாளி தும்மினாலோ அல்லது இருமினாலோ அல்லது சுவாசத்தின் மூலமாகவோ கொரோனா கிருமிகள் காற்றில் கலந்து பிறருக்கு பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே நேரம் விமான பயணத்தின் போது இதே அளவுக்கு கொரோனா பரவல் இருக்குமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளில் பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த மார்ச்.9ல் டெல் அவிவ் நகரில் இருந்து பிராங்புர்ட் சென்ற விமானத்தில் 102 பேர் பயணித்தனர். இதில் 7 கொரோனா நோயாளிகள் இருந்துள்ளனர். அதில் 4 பேருக்கு அறிகுறிகள் தென்பட்டன. அதே நேரம் அந்த விமானத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை. பின்னர் விமானத்தில் பயணித்தவர்களை பரிசோதித்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரிலிருந்து சீனா சென்ற விமானத்தில் 325 பேர் இருந்துள்ளனர். அதில் ஒரு கொரோனா நோயாளியின் மூலம் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ,ஜன. 22ல் சீனாவிலிருந்து கனடா சென்ற மற்றொரு விமானத்தில் தம்பதியர் இருவருக்கு கொரோனா இருந்துள்ளது, 15 மணி நேர விமான பயணத்தில் விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

பெரும்பாலான விமான நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் விமானங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், சீரான இடைவெளியில், 3 அல்லது 5 நிமிடங்களுக்கு ஒரு முறை, புதுப்பிக்கப்படும் காற்றோட்டத்தின் காரணமாக கொரோனா பரவல் குறையலாம். பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவல் மேலும் குறையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்