டிஎன்பிஎஸ்சி மீது குறை சொல்லக்கூடாது: முதல்வர்

1 month ago

Tamil_News_large_2475937

 டி.என்.பி.எஸ்.சி., என்பது தன்னாட்சி அமைப்பு. அதன் மீது பொத்தாம்பொதுவாக குறை சொல்லக்கூடாது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., தன்னாட்சி பெற்ற அமைப்பு. தேர்வில் முறைகேடு செய்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பு மீது பொத்தாம் பொதுவாக குறைக்கூறக்கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்துவது அவரது விருப்பம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகி விட்டது. 70 வயது ஆகிறது. இதனால், அவரால் குனியமுடியவில்லை. பேரனாக நினைத்து தான் காலில் குத்திய குச்சியை எடுக்க சொன்னார். உள்நோக்கத்துடன் செய்யவில்லை. இந்த விவகாரத்தை மீடியாக்களும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.தமிழகத்தில் வறட்சி என்பது இல்லை. நன்றாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.

அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், மாணவர்களின் திறனையும், தகுதியையும் எப்படி அறிய முடியும். மாணவர்களின் தகுதியை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து தேர்வையும் ரத்து செய்து விட்டால், மாணவர்கள் வெளியூர் செல்ல முடியாது. இங்கேயே தான் இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகள்