யேர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்

1 year ago

WhatsApp-Image-2019-05-01-at-22.24.411-1024x576

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் கவனயீர்ப்பை ஏற்படுத்தினர்.

தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாதைகளை தாங்கியவண்ணம் , யேர்மன் மொழியில்  துண்டுப்பிரசுரங்களை வழங்கி பல்லின சமூகத்திடம் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.யேர்மன் தலைநகரில் நடைபெற்ற மே தின பேரணியில் தமிழீழ பாடல்களும் வேற்றின அமைப்புகளின் ஆதரவுடன் ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிராங்பேர்ட் நகரத்தில் தமிழ் பெண்கள் அமைப்பினரால்  தாயக உறவுகளின்   வாழ்வாதாரத்திற்காக  தமிழீழ உணவக நிலையங்கள் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2019-05-01-at-22.24.435-1024x768 WhatsApp-Image-2019-05-01-at-22.24.39 WhatsApp-Image-2019-05-01-at-22.24.37-1024x497

சமீபத்திய செய்திகள்