மக்களுக்கு நீதி: தமிழகம் மூன்றாமிடம்

3 months ago

Tamil_News_large_240641020191108000319

நாட்டிலேயே நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி போன்றவற்றில் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச் செய்வதில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்திய நீதி அறிக்கை என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி புள்ளி விபரங்களை சேகரித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம், போலீஸ், சட்ட உதவி ஆகியவற்றில் மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளாவும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளன. பஞ்சாப், ஹரியான மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரு கோடிக்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள மாநிலங்களை பொறுத்தவரை கோவா முதலிடத்திலும், சிக்கிம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

 

சமீபத்திய செய்திகள்