அரசியல் சர்ச்சைகளுக்குள் தம்மை இழுக்கவேண்டாம்

1 month ago

anil ja

அரசியல் சர்ச்சைகளுக்குள் தம்மை இழுக்கவேண்டாம் என இலங்கை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரியுள்ளார்.

அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை போன்ற அரச ஊழியர்கள் எந்த கட்சியையும் சார்ந்து செயற்பட்டது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசாங்கங்களாலும் பல நெருக்கடிகளை தாம்  சந்தித்துள்ளதாகவும், எனினும் பயந்து பின்வாங்கியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளை தங்களால்சில நிபந்தனைகளின் அடிப்படையில்  முன்னெடுக்க முடியும் என்றே ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

சமீபத்திய செய்திகள்