இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச

1 month ago

sajith pre

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள பல இலங்கையர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு பலமுறை அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர்.

எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்துவதாக தெரியவில்லை என தெரிவித்த அவர் சீசெல்ஸில் நோயாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமையளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிர்கதியாகியுள்ளவர்கள் இலங்கைக்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும் என்றும்  அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்