சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பிரச்சினைகள் - நிமல் சிறிபால டி சில்வா

6 months ago

Nimal-Siripala-De-Silva

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊவா பரணமக பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பாக தற்போதைய நிலையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு, அரசியல்வாதிகள் மற்றும் வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டதாக என்பது தொடர்பிலேயே தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்