நியூசிலாந்திலும் ‘டிஜிட்டல் டைரி' - கோவிட் தடமறிதல் App

1 week ago

COVID SAFE NEW ZEALAND

கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்க ‘டிஜிட்டல் டைரி ’ என்ற புதிய தடமறிதல் தொடர்புப் பயன்பாட்டை நியூஸிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.

குறித்த  பயன்பாடு, எதிர்வரும் புதன்கிழமை அறிமுகப்படுத்தும் என நியூஸிலாந்துப்  பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘டிஜிட்டல் டைரி’ மக்கள் தங்கள் தனிப்பட்ட செயற்பாடுகளை பதிவு செய்ய உதவும் எனினும் உள்ளீடுசெய்யப்படும் தரவுகள் பயனரைத் தவிர வேறு யாருடனும் பகிரப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது எதிர்காலத்தில் ஏற்படும் பரவலைக் கண்காணிக்கவும், குறைக்கவும், பரவலான சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றை இந்த பயன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ள இதன் மூலம்  ‘எதிர்காலத்தில் நீங்கள் கொவிட்-19 உடன் இருப்பதைக் கண்டறியப்படும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களது நடமாட்டம் குறித்து அறிய எளிதான குறிப்பு இதன் மூலம் கிடைக்கும் ’ என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே  புதிய தடமறிதல் பயன்பாட்டினை ஜேர்மனி, சிங்கப்பூர், தென்கொரியா, கனடா போன்ற நாடுகள் பின்பற்றி வருகின்றன.

எவ்வாறாயினும் இந்த  பயன்பாடு கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதற்கு  உதவினாலும், தனியுரிமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்