ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்ட ஜனாதிபதி ! -ருவன் விஜேவர்த்தன கடும் கண்டனம்

1 week ago

ruwan v

அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட, ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடுமையான சொற்களுடன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட முன்னர், தன்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்