10 வருடங்கள் கடந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மக்கள்

8 months ago

varathar

கடந்த ஐந்து வருட காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவிதமான அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்த பிரதேசம் முல்லைத்தீவு. இங்கு வாழும் மக்கள் தற்போதும் பல்வேறு இழப்புகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானவர்கள்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.

கடந்த ஐந்து வருட காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவிதமான அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்