நம்பிக்கை தரும் பட்ஜெட்: மோடி பாராட்டு

6 months ago

Tamil_News_large_2313342

புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய படியாக இன்றைய மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக இந்த பட்ஜெட் உள்ளது. அரசில், பெண்கள் அங்கம் வகிக்கும் விதமாக, தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டமைப்பை மையமாக கொண்டுள்ளது. 5லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, நாட்டை உருவாக்கிடும் முதல் படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல அம்சங்கள் உள்ளன. புதிய இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். நாட்டு மக்களை திருப்திபடுத்தும். விவசாயத்தை புதிய திசையில் பயணிக்கும்.

இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். சோலார், எலக்ட்ரிக், பேட்டரி என சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட பசுமையான பட்ஜெட் இதுவாகும். எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை உருவாக்கியுள்ள நிதி அமைச்சருக்கு பாராட்டுகள். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்