மஹிந்த சஜித்திற்கு மறைமுக கொலை மிரட்டல் ?

6 months ago

mahin

ஸ்ரீசங்கபோ மன்னன் கொலை செய்யப்பட்ட பின்னர் கோட்டாபய மன்னரானதை சஜித் அறிந்திருக்க மாட்டார் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுரலிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இரண்டு மேடைகளுள்ளன. ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேடை. மற்றையது எமது மேடை.

எமது மேடையிலுள்ள வேட்பாளர் அவரின் கொள்கை மற்றும் இலக்கு தொடர்பில் பேசுகின்றார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை தொடர்பாக பேசுகின்றார்.

அவரின் மேடையில் தான் ஸ்ரீசங்கபோ மன்னனாக மாறுவது தொடர்பாக பேசுகின்றார். எனினும், ஸ்ரீசங்கபோ மன்னன் கொலை செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய மன்னரானமையை அவர் அறிந்திருக்க மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்