பயங்கரவாதிகள் ஊடுருவல்: கடற்படை கண்காணிப்பு தீவிரம்

1 year ago

Tamil_News_large_2351455

இலங்கை போல் தமிழகத்திலும் தொடர்வெடிகுண்டு சம்பவம் நடத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஆறுபேர் தமிழகத்தில் ஊடுவிய தகவலையடுத்து கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.மேலும் பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்ட மூன்றுபேர் கோவை போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் கொச்சியில் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை தகவலையடுத்து கடல் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரண், கோவை தவிர அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை ஆயுதப்படை போலீசார் கண்காணிக்கின்றனர். கமாண்டோ படையினர் மேட்டுப்பாளையத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர், என்றார்.

 

சமீபத்திய செய்திகள்