பொலிஸாரின் தடையையும் சுடரேற்றி அஞ்சலியை செலுத்திய சிவாஜிலிங்கம்!

1 week ago

mksivajilingam

பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற  முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள்,  யாழ் – மன்னார் வீதியூடாக  பயணித்தபோது, சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு, 1 மணிநேர காத்திருப்புக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர்  அவர்கள்  யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டபோது, பொலிஸ்  குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி குறித்த நிகழ்வினை தடை செய்தனர்.

நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனக்கூறிய சி.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அங்கு சென்ற வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிசாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்