சிறுபான்மையினரை கொடுமை செய்துவிட்டு மறைக்காதீர்கள்.. ஐநாவில் பாக்.கிற்கு இந்தியா பொளேர் பதிலடி!

9 months ago

pak-1568133498

பாகிஸ்தான் தனது நாட்டில் சிறுபான்மையினரை கொடுமை செய்துவிட்டு அதை உலக அரங்கில் மறைக்க பார்க்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை முதல் செயலாளர் விமர்ஷ் ஆர்யன் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரச்சனை தற்போது உலக அரங்கில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. சென்ற மாதமே காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கொன்று சென்றது. இப்போது ஐநா மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஐநா மனித உரிமை மாநாடு தற்போது ஜெனிவாவில் இருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சலில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 47 நாடுகள் இந்த 42-வது மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது. இதில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் கொண்டு வந்தது. காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகளை மீறி, மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும். இஸ்லாமியர்கள் கொடுமைகளை அனுபவிப்பதாகவும் தெரிவித்தது. இதற்கு தற்போது இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத்துறை முதல் செயலாளர் விமர்ஷ் ஆர்யன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். அதில், பாகிஸ்தான் தனது நாட்டில் சிறுபான்மையினரை கொடுமை செய்துவிட்டு அதை உலக அரங்கில் மறைக்க பார்க்கிறது.

பாகிஸ்தானின் வரலாறு என்னவென்று எல்லோரும் தெரியும். அவரின் செயல்பாடே அவர்கள் யார் என்று உலகிற்கு உணர்த்தும். அவர்கள் உலக அரங்கை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். அது எப்போதும் நடக்காது.பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஷியா முஸ்லீம்கள, அஹமதியாக்கள், இந்துக்கள் எல்லோரும் தினமும் கொடுமைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் அதை வசதியாக பாகிஸ்தான் மறைத்து நாடகம் ஆடுகிறது. இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பு எடுத்த முடிவின் படி, பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விஷயத்தில் தலையிட உரிமை இல்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவின் தனிப்பட்ட உள்நாட்டு விஷயம், என்று குறிப்பிட்டுள்ளார

சமீபத்திய செய்திகள்