32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்!

6 months ago

10-1436531379-akash-9-1566304371

நியூயார்க்: 500 கிலோ மீட்டருக்கு அதிகமாக சென்று தாக்க கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மீண்டும் அணு ஆயுத போர் பதற்றம் நிலவி வருகிறது. 1987ல் பனிப்போருக்கு பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் முக்கியமான அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதன்படி இரண்டு நாடுகளும் 500 கிலோ மீட்டர் முதல் 5500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை இனி சோதனை செய்ய கூடாது. பாதுகாப்பு கருதி சோதனை செய்ய கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த 32 வருடங்கள் இரண்டு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை மிக தீவிரமாக கடைப்பிடித்து வந்தது. ஆனால் கடந்த வாரம் ரஷ்யா அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. இதில் 7 பேர் பலியானார்கள். இது அணு ஏவுகணைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இந்த சோதனையில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான கோபத்தில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ரஷ்ய அமெரிக்கா இடையில் போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. ஆம் 32 வருடங்கள் பழமையான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று 500 கிலோ மீட்டருக்கு அதிகமாக சென்று தாக்க கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. நேற்று இரவு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை துல்லியமாக இந்த ஏவுகணை தாக்கியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

32 வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா இப்படி ஒரு சோதனையை செய்து இருக்கிறது. அதிலும் வெற்றிபெற்றுள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்க கூடிய வலிமை கொண்டது இந்த ஏவுகணை. இதன் மூலம் 5800 கிமீ தூரம் வரை சென்று தாக்க முடியும்

இதனால் ரஷ்யா தற்போது கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரஷ்யாவின் அணு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா இதை செய்துள்ளது. அமெரிக்கா இதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்