ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த எச்சரிக்கை!

1 month ago

ajith p perera2

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிகை விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பி.பெரேரா, சிறிகொத்தா  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் இது அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடையும் என்றும், இதனை அடுத்து சிறிகொத்தாவை ஐக்கிய மக்கள் சக்தியினர் கைப்பற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் மூடப்படுவதாக வெளியான செய்திகள் ரணில் தரப்பினரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் அஜித் பி.பெரேரா கூறினார்.

சமீபத்திய செய்திகள்