போர் விமானங்களை குவிக்கும் பாக்.,: எல்லையில் தொல்லை

4 months ago

Tamil_News_large_2342406

 

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததை அடுத்து இந்தியா- பாக்., இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை குவித்து வருகிறது.

லடாக்கை ஒட்டிய பகுதியில் ஸ்கர்து விமான தளத்தில் போர் கருவிகளை, 3 சி-130 ரக போக்குவரத்து விமானங்களைக் கொண்டு பாகிஸ்தான் விமானப்படை குவித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பாக்.,ன் நடவடிக்கைகளை இந்திய அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக தாக்குதலுக்கு பாக்., பயன்படுத்தும் ஜெஎப் 17 ரக போர் விமானங்களையும் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

ஒட்டுமொத்த பாக்., எல்லையையும் இந்திய ராணுவமும், உளவு அமைப்புக்களும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து பல காலங்களுக்கு முன் வாங்கிய சி 130 ரக போக்குவரத்து விமானத்தை பாக்., பயன்படுத்தி வருகிறது. தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்துடனேயே பாக்., விமானப்படை இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் இந்திய எல்லையில் ராணுவத்தையும் பாக்., குவித்து வருவதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது மற்றும் காஷ்மீர்-லடாக்கை பிரித்து 2 புதிய யூனியன் பிரதேசங்களாக்குவது ஆகியவற்தை பெரிய அளவில் பிரச்னையாக்கவே பாக்., இவ்வாறு செய்வதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்