முக்கியத்துவம் பெறும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் -சார்ள்ஸ் நிர்மலநாதன்

4 months ago

Charles-Nirmalanathan

சிறுபான்மை மக்களின் வாக்குகள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மிக முக்கிய பங்குவகிக்கப்போகின்றது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவர்கள் முதலில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

அது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக கடந்த வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபை அவர்கள் தங்களது கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை கூற வேண்டும்.

சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்