மீண்டும் உலகப்போர்: இம்ரான் கான் மிரட்டல்

5 months ago

Tamil_News_large_2356750

 காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகள் பேசாவிட்டால், மீண்டும் ஒரு உலகப் போர் வரும். இந்த முறை அணுஆயுதங்களுடன் நடக்கும் என உலக நாடுகளுக்கு பாக்., பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இம்ரான் கான் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில், காஷ்மீர் விவகாரத்தை உலக நாடுகள் புறந்தள்ள முடியாது. காஷ்மீர் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் மீது இந்தியா கையாளும் அடக்குமுறையை உலக நாடுகள் நிறுத்தாவிட்டால், இரு அணுஆயுத நாடுகள் நேரடி ராணுவ மோதலில் ஈடுபடுவதை தடுக்க முடியாது. இரண்டாம் உலகப் போர் போன்று மீண்டும் ஒரு போர் உருவாகும். இம்முறை அணுஆயுத துணையுடன் நடக்கும்.

ஆக.,5 ம் தேதி வெட்கக் கேடான, மிக மோசமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து ரத்து செய்துள்ளது. இந்திய சட்டப்படி இது சட்டவிரோதமான நடவடிக்கை. அதை விட முக்கியம், காஷ்மீர் தொடர்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதுடன், இந்தியா - பாக்., இடையேயான சிம்லா ஒப்பந்தத்தையும் மீறுவதாகும். புதிய இந்தியா என்ற பெயரில் மோடி அரசு, காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, மக்களின் உரிமைகளை பறித்து, வீட்டில் சிறை வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்