சிறந்த பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவோம் - சஜித் பிரேமதாச

4 months ago

sajith

உலகில் காணப்படும் பாரிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரு நாடு செழிக்க வேண்டுமென்றால், ஜனாதிபதி ராஜாவாக இருக்கக்கூடாது எனவும் நாட்டின் வளர்ச்சிபெற வேண்டுமானால் தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான நிர்வாகம் அவசியம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் நாட்டை நிர்வகிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் அவசியம் என்றும் இலங்கையை முன்னோக்கி நகர்த்த ஒரு பலமான அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

அத்தோடு இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன் என்றும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவோம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

படையினர் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்றும் அவர்களின் கெளரவத்தை காத்துக்கொண்டு தங்கள் வேலையை சுயாதீனமாக செய்ய முடியும் என்பதை உறுதி செய்வேன் என்றும் கூறினார்.

இதேவேளை இலங்கையின் பாதுகாப்பையோ அல்லது எதிர்காலத்தையோ பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்