தமிழர் ஒருவரையே ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் - இரா. துரைரெட்னம்

6 months ago

thurai

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் நிலையில்  தமிழர் ஒருவரையே ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரான ரா. துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதற்காக முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் உரிமை தொடர்பான கோரிக்கைக்கு எந்தவித தீர்வும் முன்வைக்கவில்லை. வடகிழக்கு மக்களின் வாக்குகள் தேவையில்லையென்று கூறியமை,தென்னிலங்கை பகுதியில் பௌத்தம் விதைக்கப்பட்டுள்ளமை ஆகிய   காரணங்களை முன்வைத்து கோட்டாபய ராஜக்ஷவை நிராகரித்தது உண்மையே.. இதுவொரு வரலாற்று ரீதியான வாக்களிப்பு.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் கடந்த கால போராட்டத்தின் வலியை உணர்ந்து தென்னிலங்கையின் முன்வைக்கப்பட்ட பௌத்த சிங்கள, இனவாதத்திற்கு எதிராக தங்களது உரிமைகளையும் தேவைகளையும் நிலைநாட்டுவதற்காக வாக்களித்திருக்கின்றார்கள்.  தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தங்களது செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதன்மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ எதிர்காலத்தில் வடகிழக்கில் உள்ள சிறுபான்மையினம் தொடர்பாக   தனது, இணக்கப்பாடான அரசியலை முன்வைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்