ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணிலுக்கு அழைப்பு !

7 months ago

ranil1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவன ஊழல் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை செய்யும் குறித்த ஆணைக்குழுவில் எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்போது மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அவர் இதன்போது சாட்சியம் வழங்கவுள்ளார்.

இதேவேளை அரச வங்கி கணினி கட்டமைப்பை உருவாக்கும்போது இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவும் அதே தினம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்